ஊர் ஜமாஅத்தின் தடைகளை மீறி வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – அம்மாபட்டிணம்!

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 9-12-2011 அன்று
ஊர் ஜமாஅத்தின் தடைகளை மீறி மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொது கூட்டம் நடைபெற்றது.

இந்த பொது கூட்டம் நடத்த விட கூடாது என்பதற்காக, சுன்னத் வல் ஜமாத்தினர் காவல் துறையை அணுகி இவர்களுக்கு பொது கூட்டம் நடத்த அனுமதி கொடுக்ககூடாது முறையிட்டனர்.

ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.

இதையும் தாங்க முடியாத சுன்னத் வல் ஜமாத்தினர்,ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கு சென்று தவ்ஹீத் ஜமாஅத் கூடத்துக்கு யாரும் போக கூடாது என்றும்,பள்ளிவாசல் மைக்கில் அறிவிப்பு செய்தும் பொது கூட்டத்தை நடத்த பல்வேறு சதி திட்டத்தை தீட்டினர்.

ஆனால் அல்லாஹ் இவர்களுடைய சதியை முறியடித்து பொது கூட்டம் நடத்த பெரும் உதவி செய்தான்.

பின்னர் பொது கூட்டம் ஆரம்பித்தவுடன் மக்கள் கூட்டம் அலை அலையாய் வந்து குவிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கிர் முகமது அல்தாபி அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்னும் தலைப்பிலும் K.M.A மக்தூம் அவர்கள் வரதச்சனை ஓர் வன்கொடுமை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்..அல்ஹம்துலில்லாஹ்!!