ஊர் ஜமாஅத்தினர் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: களமிறங்கிய ராம்நாட் TNTJ

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையை ச் சார்ந்த பக்கர் (வயது 70) என்ற சகோதரர் மரணமடைந்ததை தொடர்ந்து நபி வழி முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு பனைக்குளம் முஸ்லிம்களின் பொது மையவாடியை நிர்வகிக்கும் மேற்கு தெரு ஜமாஅத்தினரை கிளை நிர்வாகிகள் அணுகியபோது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு உள்ளூர் ஜமாஅத்தினர் மறுப்பு தெருவித்தனர்.

அதனை தொடர்ந்து சகோதரர் பக்கர் அவர்களின் குடும்பத்தினர் ஜனாஸாவை TNTJ வசம் ஒப்படைத்து நபிவழி முறைப்படியே நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கூரினர். உடன் இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்  மாவட்ட நிர்வாகிகள் தலையிட்ட R.D.O, D.S.P, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசினர்.  பின்னர் இரு தரப்பையும் அழைத்து பேசப்பட்ட R.D.O பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம்களின் வக்பு சொத்தான பொது மையவாடியை தனி நபர் சொத்து என சுன்னத் ஜமாத்தினர் R.D.O விடம் தவறான தகவலை கொடுத்தனர் . பொதுமக்கள் சொத்தைய தங்களது சொந்த சொத்து என அரசு தரப்பை ஏமாற்றினர்.

சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமான தவ்ஹீத் சகோதரர்கள் அங்கே குழுமினர்.  இனிவரும் காலங்களிலும் நபிவழி அடிப்பைடயில் முஸ்லிம்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது குடும்ப சொத்தில 15 செண்டு நிலத்தை சகோதரர் பக்கர் குடும்பத்தினர் TNTJ விற்கு கொடுத்தனர்.

உடனே இதற்க்கு R.D.O விடம் அனுமதி பெற்றுக்கொண்டு .சகோதரர் பக்கர் வீட்டிற்கு அருகாமையில் நபி வழி அடிப்படையில் நல்லடடிக்கும் செய்யப்பட்டு  ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில்  நுற்றுக்கணக்கான
ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  இது பனைக்குளத்தில் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது!