ஊமைகளாக பிறக்கும் குழுந்தைகள்: நெல்லை குறிச்சிகுளத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கலக்டரிடம் மனு!

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் குறிச்சிகுளம் கிராமத்தில் கடந்த 200 ஆண்டுகளாக இங்கு பிறக்கும் குழந்தைகளில் 10% வாய் பேச முடியாத, காது கேட்காத ஆண், பெண் ஊமைகளாக மட்டும் பிறக்கின்றது.

இதற்கான காரணம் இவர்களுக்கு இதுவரை தெரியவில்லை எனவே, இக்கிராமத்தை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் பலமுறை இவர்கள் ஊனமுற்றவர் உதவித் தொகை கோரியும் இதுவரை கிடைக்காததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அரசு நலத்திட்ட அணிச் செயலாளர் சுலைமான், மாவட்ட செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலைமையில் வாய் பேச முடியாத இவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, ஊனமுற்றவர் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னும் சில நாட்களில் நேரடியாக அந்தக் கிராமத்திற்கு நானே வருகை தந்து உங்களுக்கு அங்கேயே உதவித் தொகைகளுக்கான உத்தரவையும் பிறப்பிப்பேன் என்று உறுதியளித்தார்.