உளவியல் பாடத்தில் முஸ்லிம் மாணவி முதலிடம்

உளவியல் பாடத்தில் காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமுத்து 172 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த இவரது தந்தை பெயர் அபுமுஹமது.மாநில அளவில் ரேங்க் பெற்றது குறித்து பாத்திமுத்து கூறியதாவது:

எனது தந்தை சென்னையில் சமையல் வேலை செய்து வருகிறார். எனக்கு 7 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி அல்லது நர்சிங் படிக்க விரும்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் போதிய வசதியில்லை. அரசு உதவி செய்தால் என்னால் மேல் படிப்பை தொடர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாத்திமுத்துவை அவரது தாய் பால் அமீனா மற்றும் சகோதர, சகோதரிகள் பாராட்டினர்.

தெடித்தந்தவர்-முஹம்மது பாதுஷா