உலக மக்கள் தொகையில் 4 பேரில் ஒருவர் முஸ்லிம்

156398704வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.

லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.

செய்தி: முஹம்மது அப்துல்லாஹ்