உலகலாவிய சிக்கலில் மாட்டிக்கொண்ட உலகநாயகன்(?)

திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடிவரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை நீடித்தால் இழப்புத் தொகை மேலும்அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர்ராஜேஸ் தடானி கூறினார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடகவினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர்பிரகாஷ்ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கமலஹாசன் ரூ.95 கோடி செலவில் தயாரித்த விஸ்வரூபம் படம் இஸ்லாமியஅமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 25-ந்தேதி திட்டமிட்டப்படிதிரைக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் அந்தப் படத்தை வெளியிட 2 வாரம் தடைவிதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில்அந்தப் படம் வெளியானது. ஆனால் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாகஆந்திரா, கர்நாடகாவில் அந்தப் படம் திரையிடப்படுவது முடக்கப்பட்டது.

கர்நாடகத்தில்…

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியிடஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் மட்டும் 12 தியேட்டர்களில்விஸ்வரூபம் படத்துக்காக முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால்பெங்களூரில் படத்தை திரையிட போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ்தடைவிதித்தார்.

கேரளாவில்…

கேரளாவில் கடந்த 25-ந்தேதி 82 தியேட்டர் களில் விஸ்வரூபம் படம்திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால்சில தியேட்டர்களில் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. மறுநாள் சில இந்து அமைப்புகள்மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த ஆதரவு காரணமாக சில இடங்களில்விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. என்றாலும் கேரளாவிலும் விஸ்வரூபம்முழுமையான அளவில் வெளியாகவில்லை.

ஆந்திராவில்…

கர்நாடகா, கேரளா போலவே ஆந்திராவிலும் கடந்த வெள்ளிக்கிழமை பலதியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி முடிந்ததும்ஆந்திராவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் உள்துறை மந்திரி சபீதா இந்திராரெட்டியை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். விஸ்வரூபம் படத்தைநிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தனர்.இதனால் மந்திரி சபீதா விஸ்வரூபத்துக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.இதையடுத்து ஆந்திராவில் எந்தத் தியேட்டரிலும் விஸ்வரூபம் படக் காட்சிகள்தொடரவில்லை. விஸ்வரூபம் படத்துக்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்கடந்த 22-ந்தேதியில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் முன்பதிவுகள்செய்யப்பட்டிருந்தன. 25-ந்தேதி ஒருநாள் மட்டுமே அந்தத் தியேட்டர்களில்விஸ்வரூபம் காட்டப்பட்டது. மறுநாள் முதல் விஸ்வரூபத்தைத் திரையிடமுடியாததால் தற்காலிகமாக தண்டுபால்யா போன்ற பழைய படங்களை வாங்கிதிரையிட்டுள்ளனர்.

விஸ்வரூபத்துக்குத் தடை நீங்குமா, நீங்காதா என்று தெரியாததால் அந்தத்தியேட்டர் உரிமையாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தென் இந்தியாவில்கேரளாவில் உள்ள சில தியேட்டர்கள் வேறு எங்கும் விஸ்வரூபம்திரையிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டதடை நடவடிக்கை தற்போது வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி உலகம்முழுவதும் ஒவ்வொரு நாடாக விஸ்வரூபத்திற்கு தடைபோடப்பட்டு வருவதால்மிகப்பெரும் நஷ்ட்டம் கமல்ஹாசனைத் துரத்தி வருகின்றது.

உலகளாவிய அளவில் கிளம்பிய கடும் எதிர்ப்பு:

தமிழகத்தில் துவங்கிய இந்த எதிர்ப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்றுதாண்டிக்கொண்டே போய் தற்போது ஸ்ரீலங்கா, மலேசியா, கத்தர், அபுதாபி, துபை,ஷார்ஜா, ஃபுஜைரா, ராசல் கைமா, அஜ்மான், உம்மல் குவைன் என்று நீண்டுகொண்டேபோய் தற்போது ஆஸ்திரேலியாவரை சென்று உலகமே தன்னை எதிர்த்துக் கொண்டுவருவதையும், உலகளாவிய அளவில் தனக்கு நஷ்ட்டம் ஏற்பட்டு வருவதையும்உலக நாயகன்(?) விளங்கிக் கொண்டிருப்பார்.

சீண்டியது போதும்….

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்என்று ஒரு பழமொழி உண்டு. இது கமல் விஷயத்தில் நூறு சதவீதம்உண்மையாகிவிட்டது. இதற்கு முன்பாக இஸ்லாமியர்களை கமல் பலதடவைசீண்டியுள்ளார். அதையே தனது பிழைப்பாக ஆக்கி தற்போது இவர் ஆடிய மெகாஆட்டத்திற்கு மகா அடி விழுந்துள்ளது.

மருதநாயகமும், சண்டியரும்:

இதற்கு முன்பாக மருதநாயகம் என்ற ஒரு படத்தை பிரம்மாண்டமாகதயாரிக்கப்போவதாக பலகோடி செலவில் துவக்க விழா நடத்தி படத்தைத்துவக்கினார் கமல்ஹாசன்.

மருதநாயகம் என்ற படத்தின் கதையை அறியாத தேவர்கள் சமுதாயம் பின்புதான்அவரின் உண்மைக் கதையை அறிந்தது.

மருதநாயகம் என்ற மன்னன் இஸ்லாத்தைத் தழுவி கான்சாகிப் ஆக மாறிபூலித்தேவன் என்பவரை போரில் கொன்றார் என்பது வரலாறு.

இந்த வரலாற்றை படம் எடுத்தால் நமக்கு உள்ள மதிப்பு போய்விடும்; இஸ்லாமியஅரசன் இந்துக்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வரலாற்றை படமாக எடுத்தால்அது அவமானம் என்று கூச்சல் போட்டனர் சங்பரிவாரக் கூட்டங்கள்.

அவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப்படத்தை கைவிட்டார் கமல்ஹாசன்.

சண்டியர் விருமாண்டியான கதை:

அதுபோல சண்டியர் என்ற படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார் கமல்.சண்டியர் என்பது தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களை அழைக்கும் ஒரு பெயர்என்பதால் இதன் மூலம் தலித்துகளை தாக்கி படம் எடுக்கப்போகின்றார் என்று தலித்அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதனால் சண்டியர் என்ற படத்தின்தலைப்பையே விருமாண்டி என மாற்றி கதை அம்சத்தையும் மாற்றி படம் எடுத்தார்கமல்.

முஸ்லிம் சமுதாயம் மட்டும் என்ன இழிச்சவாய் சமுதாயமா?:

ஆனால் தேவர் சமுதாயத்தைப் போல, தலித்துகளைப் போல முஸ்லிம் சமுதாயம்இவருக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தி ஹேராம், உன்னைப் போலஒருவன் போன்ற படங்களை எடுத்து தான் ஒரு இஸ்லாமிய எதிரி என்பதை கமல்நிரூபித்தார்.

இதையெல்லாம் செய்தபோது இஸ்லாமிய சமுதாயம் அவரை எதிர்க்காதகாரணத்தால், மௌனமாக இருந்த காரணத்தால் இவர்களை நாம் எவ்வளவுமிதித்தாலும் தாங்கிக் கொள்வார்கள் என்று மிதிக்க ஆரம்பித்தார் கமல். இஸ்லாமியசமுதாயத்தை இழிச்சவாய் சமுதாயம் என நினைத்துக் கொண்டார். அதனுடையமற்றொரு வெளிப்பாடுதான் கமலின் சுயரூபத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியவிஸ்வரூபம்.

இந்த விஸ்வரூபத்தை தற்போது முஸ்லிம்கள் வீறுகொண்டு எழுந்துபுஸ்வானமாக்கியுள்ளனர். இதன் மூலம் பாடம் படித்து இனியாவது கமல் திருந்தவேண்டும்.

இனியாவது பாடம் படிப்பார்களா?:

உலக நாயகன் என்று சொல்லப்பட்ட கமல், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி படம்எடுத்ததன் விளைவாக தற்போது உலகளாவிய அளவில் முஸ்லிம்களின்எதிர்ப்பையும், உலகளாவிய அளவில் மாபெரும் நஷ்டத்தையும் சந்தித்துவருகின்றார்.

இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியோ, அவர்களைமட்டப்படுத்தியோ, சீண்டியோ இனிமேல் படம் எடுத்தால் கமல் அடைந்தநஷ்ட்டத்தைவிட பலமடங்கு நஷ்ட்டத்தை அடைய நேரிடும் என்பதைதிரைக்கூத்தாடிகள் விளங்கிக்கொண்டு இனியாவது பாடம் படிக்க வேண்டும். பாடம்படிப்பார்களா?