உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஜூலை 20 முதல் பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 394 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் உள்ளன.

சில மாவட்டங்களில் உதவி தொடக்கக் கல்வி, மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வில் கலந்து கொள்ள முதுகலை மற்றும் இளங்கலை பட்டயப்படிப்புடன் ஆசிரியர் பட்டயத்தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்போது உள்ள காலிப்பணியிடங்களில் 30 சதவீதம்
பணியிடங்கள் மட்டுமே இந்த தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 70 சதவீத பணியிடங்களை ஏற்கனவே உள்ள நடை முறைகளின் படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியில் உள்ள மூத்த தலைமை ஆசிரியர்கள் இப்பணிக்கு பணிமாற்றம் செய்யப்படுவர்.