உணர்வு 14-32: வருந்துகிறோம்!

அன்புள்ள் கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வார உணர்வு (14-32) இதழில் மதக் கலவரத் தடுப்பு படை தேவை இல்லை என்ற கருத்தில் தமிழன் என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது. உணர்வின் செய்திப் பொறுப்பாளர் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் சொந்த ஊர் சென்று விட்டதால் அந்தக் கட்டுரை கவனக் குறைவாக வெளியிடப்பட்டு விட்டது.

மதக் கலவரத் தடுப்பு சட்டம் வேண்டும் என்று நீண்ட காலமாக முஸ்லிம்கள் கோரி வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத்தும் அதையே கோரி வந்தது.

குஜராத் போன்று காவல் துறை ஆசியுடன் வன்முறை வெறியாட்டத்தைத் தடுக்கும் வகையில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டது.

இத்தகைய சட்டம் தேவை என்பது தான் ஜமாஅத்தின் நிலைபாடு. இது ஹைதராபாத் கலவரத்துக்காகக் கொண்டு வரப்படவில்லை. மும்பை, குஜராத் போன்ற கலவரங்கள் நடக்காமல் தடுக்கவே கொண்டு வரப்படவுள்ளது.

கலவரத் தடுப்புப் படை அமைத்து அதில் எல்லா மதத்தவரும் சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

மதக் கலவரம் நடக்கும் பகுதியை கலவரத் தடுப்புப் படை கையில் எடுத்துக் கொள்வது போன்ற பல அம்சங்கள் அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

மதக் கலவரத் தடுப்பு மசோதாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. இருக்கின்ற சட்டங்களால் முஸ்லிம்களைப் பாதுகாக்க முடியவில்லை என்பதே நமது நிலை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தவறான அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக வருந்துகிறோம்