உடுமலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் கடந்த 23.12.2010 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த மணி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று தனது பெயரை முஹம்மது தௌபீக் என மாற்றிக் கொண்டார்.

உடுமலை கிளை தலைவர் அப்துர்ரசீது மற்றும் கிளை சகோதரர்கள் இவருக்கு ஏகத்துவகொள்கையை கூடுதலாக விளக்கினார்கள்.

அவருக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக உடுமலை கிளை சார்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!