ஈரோட்டில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-3-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு உறுப்பினர் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இம்மை ஒற்றுமைக்கும் மறுமை வெற்றிக்கும் என்ன வழி? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மாநில மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.