ஈமானை இழந்த ம.ம.கட்சி


மேற்கண்ட தமுமுக வின் அறிவிப்பு பலகையில் எழுதி இருக்கும் வாசகங்கள் என்னவென்று தெரிகின்றதா?

கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டு, பூந்தி, ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.

இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு நபிகளாரின் ஒரு எச்சரிக்கையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப் பார்கள்; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாத வற்றைச் செய்வார்கள். ஆகவே, யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
முஸ்லிம் – 80

ஒரு தீமையைக்காணும்போது அதை கையால் தடுக்கமலோ, அல்லது நாவால் தடுக்காமலோ, அல்லது குறைந்தபட்சம் மனதாலாவது வெறுத்து ஒதுக்காமலோ யார் இருக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் ஈமான் என்பது கடுகளவுகூட இல்லை என நபிகளார் எச்சரித்திருக்க, இவர்கள் மவ்லூது என்ற அப்பட்டமான இணைவைத்தலுக்கு ஆதரவாக தப்ரூக் என்னும் சீரணி வாங்கித்தர தங்களது நிர்வாகிகளே களமிறங்கி. தங்களது அறிவிப்பு பலகையிலேயே அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்றால் இவர்களுடைய ஈமானின் தரத்தை இந்த நபி மொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த ம.ம.கட்சியின் நிர்வாகியிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தவ்ஹீத் காரர்கள் இருந்ததால்தான் தங்களது இயக்கம் வளரவில்லை எனவும், அவர்களை துரத்தியடித்த பிறகுதான் தங்களது இயக்கம் அசூர வளர்ச்சிகண்டதாகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மவ்லூது ஓத தப்ரூக் வழங்குவதற்கு பணம் வசூலித்து தருபவருடைய கருத்து இதுவாகவல்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

-நுஃமான்