இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – மதுக்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையின் சார்பாக 04.12.2011 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் பிறமத சகோதரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். பிறமத சமுதாய மக்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்ச்சியை நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் வல்ல ரஹ்மானின் வல்லமையால் மாற்றுமத சகோதரர்களும், நம் சகோதரர்களும் அலை அலையாய் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பிறமத மக்கள் இஸ்லாம் குறித்து அறிவுபூர்வமாக

கேட்ட கேள்விகளில் சில..

இறைவனுக்கு உருவம் உண்டா?

இஸ்லாம் பெண் கல்வியை ஏன் மறுக்கிறது?

இறைவனை ஏன் அவன் என்று கூறுகிறீர்கள்?

தந்தை இல்லாமல் பிறந்த ஈசா இறை தூதரா? இறை மகனா?

உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன.

நிகழ்ச்சி முடிந்த பின் நம் நிர்வாகிகளை சந்தித்த ஒரு சகோதரர் விரைவில் தான் இஸ்லாத்தை ஏற்க இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.