“இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” – அபுதாபி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக மாதம் தோறும் பெண்களுக்கென சிறப்பு மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 09.02.2012 அன்று “இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களின் மார்க்க சந்தேகங்களுக்கு சகோதரர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை கட்டிட நிதியை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரிகள் அதிகமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் விளைவாக இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சகோதரி ஒருவர் தன்னுடைய சேமிப்புகளை தலைமை கட்டிட நிதிக்கென வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.