இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையை தெரிந்து கொள்ள வேண்டும் – மன்மோகன் சிங் RBI க்கு பரிந்துரை!

மலேசியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதம மந்திரி முனைவர். மன்மோகன் சிங், இந்திய ரிசவர் வங்கியை இஸ்லாமிய பொருளாதார முறையில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் இஸ்லாமிய பொருளாதார முறைக்கு தேவை இருக்கிறது, இந்த முறையை கையாள நடவடிக்கை முயற்சி எடுக்க வேண்டும்” என்று கூறியதுடன், “ஏற்கனவே (இஸ்லாமிய பொருளாதார முறையை) பரிசீலித்து வரும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மலேசியா இந்த விஷயத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனிக்க நிச்சயம் பரிந்துரை செய்வேன்” என்றார். பி டி ஐ செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.