இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்தும் சிங்கள ஆல்பம்!

அவசரமாக பிரபலமாக நினைப்பவர்களில் ஒருவர் தான்  சிங்களப் பாடகர் இராஜ். யாரை எப்படி சீண்டினால் தனக்கு பிரபலம் கிடைக்குமோ அப்படி சீண்டிப் பார்த்து இடத்தை பிடிக்க நினைத்த இவர் அன்மையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.அந்தப் பாடல் அனைத்து முஸ்லீம்களையும் கொதிப்படையச் செய்துள்ளதுடன்,முஸ்லீம் பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது சித்தி மனீலா என்ற ஒரு பாடலை இராஜ் அன்மையில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பாடலின் காட்சியமைப்பு முஸ்லீம் சமுதாய பெண்களை கேவலப்படுத்தும் விதமாக,முஸ்லீம் பெண்கள் அணியும் கருப்பு முழு ஆடையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகள் கும்பலைச் சோந்த ஒருவனை காவல் துறை துரத்துகிறது.காவல் துறையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு தெருவழியாக ஓடும் அந்த மாற்று மத இளைஞன்,அங்கு துணி துவைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லீம் இளம் பெண்ணிடம் தன்னைக் காப்பாற்றும் படி கேட்க,தனது துணிகளுக்குள் மறைத்து அவனைக் காப்பாற்றுகிறாள் அந்த முஸ்லீம் பெண்.

முகத்திரை அணிந்து முழுமையான கருப்பு ஆடையுடன் காணப்படும் அவள்,பள்ளிவாயலில் சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொடுக்கிறாள்.

பகுதி நேர வகுப்புகளுக்கும்,பள்ளிக்கும் சென்று வரும் சந்தர்ப்பங்களில் அவனைப் பார்த்து காதல் வயப்படுகிறால் அந்தப் பெண்.
காதலின் உச்ச கட்டமாக இரவு நேரங்களில் அவளுடைய அறைக்குள் வந்து அந்தப் பெண்ணுடன் குறிப்பிட்ட ரவுடிகள் கும்பலைச் சேர்ந்தவன் தனியாகத் தங்கிச் செல்கிறான்.

இதனை அந்த முஸ்லீம் பெண்ணின் தந்தையும் காண்கிறார்.

காண்பது மட்டுமன்றி அவனுடன் தனது மகளைச் சேர்த்து அவரே வழியனுப்பி வைப்பதின் மூலம் மாமா வேலை செய்வதாக காட்சிப் படுத்தப் படுகிறார்.

செல்லும் வழியில் வேறோருவர்  மூலம் இருவரும் சுட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அந்த இருவரையும் கொலை செய்தவனை இஸ்லாமிய ஆடையில் காட்சிப் படுத்தப்படும் இன்னுமோர் இளைஞன் சுட்டுக் கொலை செய்கிறான்.

இதுதான் அந்தக் பாடலில் இடம் பெற்றிருக்கும் காட்சி அமைப்பு.

இஸ்லாமிய சமுதாய பெண்களை முழு ஆடையில் இருக்கும் விபச்சாரிகளாக சித்தரிக்க முனைந்திருக்கிறார் இராஜ்.

இதே நேரம் பாடலின் ஆரம்பத்திலும்,இறுதியிலும் ஹய்ய அலல் பலாஹ் என்ற பாங்கின் ஓசையும் ஒளி,ஒலி பரப்பப் படுகிறது.

பாடலின் இடையில் இஸ்லாமிய ஆடையில் இருக்கும் ஒரு இளைஞனை சூதாட்டக் காரணாக சித்தரித்திருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் மிக முக்கியமான ஒரு பகுதியை மாதம்பிட்டிய பள்ளிவாயலில் படம் பிடித்திருக்கிறார்கள்.

கலகத்தை தூண்டுவதற்கான முயற்சியா இந்தப் பாடல்?

சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழும் முஸ்லீம்களை சீண்டுவதின் மூலம் ஒரு கலகத்திற்கு இந்தப் பாடல் ஆரம்பமாக இருக்கிறதோ என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது.

அதாவது பள்ளிவாயிலுடன் சம்பந்தப் படுத்தி காட்சியமைப்பை அமைத்திருப்பதின் மூலம் முஸ்லீம்களின் மனதை புன்படுத்தி சிங்கள,முஸ்லிம் உறவை பாழாக்க நினைத்து இறுதியில் முஸ்லீம்கள் வெறி பிடித்து குறிப்பிட்ட கதாநாயகனை கொலை செய்வதைப் போல் காட்டியிருப்பதின் மூலம் மீண்டுமொரு தீவிரவாத சாயம் பூச எத்தனித்துள்ளார் இராஜ்.

பள்ளிவாயில் நிர்வாகத்தினருக்கு.

பள்ளிவாயில்களுக்கு முன்பாக சினிமா எடுப்பவர்களாக இருந்தாலும் சமாதான கீதங்கள் என்ற பெயரில் பாடல் எடுப்பவர்களாக இருந்தாலும் யார் வந்து அதற்கான அனுமதியைக் கேட்டாலும் மார்க்க அடிப்படையில் அதன் தரத்தை ஆய்வு செய்து,அதற்குறிய அனுமதியை பள்ளிவாயல் நிர்வாகத்தினர் கொடுக்க வேண்டும்.

நாம் கவனமற்று இருக்கும் நேரத்தில் தான் இப்படியான பல சிக்கள்கள் ஏற்படுகின்றன,மட்டுமன்றி நமது சமுதாய பெண்களின் ஒழுக்கங்களும் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக..

இஸ்லாத்தின் தூய்மையையும்,இஸ்லாமிய பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்விக்குள்ளாக நினைத்த இராஜ் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியவர், மட்டுமன்றி இத்துடன் இப்படிப்பட்ட ஈனச் செயல்களை இராஜ் விடாத பட்சத்தில் சட்ட ரீதியாக பல சிக்கள்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதையும் அவர் தெளிவாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

-ரஸ்மின்