மேலப்பாளையத்தில் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 21-4-2011 அன்று இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.   மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.ஐ சுலைமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இஸ்லாமிய கல்வி குறித்து உரையாற்றினார்கள்.

இதில் ஈரோடு அன்சர் கான் , திருப்புர் சலீம் , உத்தமபாளையம் சலீம் , விஜயாபதி ரூபான் , புளியங்குடி ஒலி முஹம்மது ஆகியோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.