இளையாங்குடியில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்

ilayangudi_kalvi_mugam_5ilayangudi_kalvi_mugam_4ilayangudi_kalvi_mugam_3ilayangudi_kalvi_mugam_2சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 08.02.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளையின் மாணவர் அணி நடத்திய கல்வி கருத்தரங்கம் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஏ.கே. சீனி முகம்மது தலைமை தாங்கினார்.

கிளைத்தலைவர் ஜமால் மைதீன், எம். முகம்மது பாசித், எச். காதர் மைதீன், அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலையில் மாநில மாணவர் அணி செயலாளர் எஸ். சித்திக் எம்.டெக்., அவர்கள் மற்றும் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களும் கருத்துரை நிகழ்த்தினார்கள்.

கருத்தரங்கில் பள்ளித்தாளாளர் ஓ.எம். காதர்பாட்சா, தலைமை ஆசிரியர் ஏ.இ. ஜான் முகம்மது மற்றும் டி.எஸ்.எச். முசாபர் அப்துல் ரஹ்மான், மானேஜிங் டிரஸ்ட்டி, டைம் டிரஸ்ட், இளையான்குடி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் சேக் அப்துல் ரஹ்மான், சேக் உதுமான் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து நிகழ்ச்சி சிறப்பபுற நடைபெற பணியாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இளையான்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 450 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.