இலவச தொழில் கல்வி பயிற்சி வகுப்புகள்: செல்போன் சர்வீஸ்,வெப்டிசைனிங்…

free_trainingதமிழக அரசின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி யைப் பெறலாம்.

இந்த மையம், ஆர்.எம். கல்வி அறக்கட்டளை யால் நடத்தப்படுகிறது. செல்போன் சர்வீஸ், சி, சி பிளஸ் பிளஸ், லினக்ஸ், வெப் டிசைனிங், நெட் வொர்க் செக்யூரிட்டி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், (அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வர வேண்டும்.

18 வயது முதல் 32 வயதுடையவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம், அண்ணா சாலை தபால் தலைமை அலுவலகம் எதிரில், சென்னை. தொலைபேசி எண்கள் : 044 28585230, 28414736, 28527579, 9382266724