இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் – இலங்கை ஹொராபொலை கிளை

கெகிராவ வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹொராபொலை கிளை ஏற்பாடு செய்திருந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் கடந்த 9-4-2012 அன்று அனுராதபுர மாவட்டத்தின் ஹொராபொல முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட ப்ரோடீன் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

இதில் 87 நபர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளும் இதில் கனிசமான அளவு கலந்துக் கொண்டது குறிப்பிடதக்கது. அல்ஹமதுலில்லாஹ்!

மருத்துவர் கே.பீ.பீ.சீ. பெரேரா அவர்கள் இம் மருத்துவ முகாமில் ஆலோசனை வழங்கினார்கள்.