இலங்கை பொதுக் குழுக் கூட்டம் 6-1-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கை மண்டலமாகிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இரண்டாவது பொதுக் குழு 06.01.2013ம் அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ரஹ்மதுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் 2012ம் ஆண்டுக்கான ஜமாஅத்தின் செயற்பாடுகள் குறித்த கூட்டறிக்கை மற்றும் நிதி குறித்த கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.

மண்டலத்தின் நிர்வாக மாற்றம் குறித்து பொதுக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதுடன் கீழ்காணும் விதத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

துணை தலைவராக செயல்பட்ட எம்.எஸ்.எஸ். கமர்தீன் அவர்களுக்கு பதிலாக
எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாளராக செயற்பட்ட ஜே.ஏ.எம். ஹஸன் அவர்களுக்கு பதிலாக ஏ.ஆர்.எம்.
ரில்வான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை செயலாளராக செயற்பட்ட எம்.ஐ. ரகீப் அவர்களுக்கு பதிலாக சகோதரர்
ரஸ்மின் அவர்களும் எம்.டீ.எம். ரியாஸ் அவர்களுக்கு பதிலாக கே.எம். பாயிஸ்
அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கான பொதுக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.