இலங்கை ஆங்கில நாளேட்டின் அவதூறு செய்தியும் அதற்கு SLTJ யின் பதிலும்!

கடந்த 19,09,2010 அன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டின் 6ம் பக்கத்தில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப் பட்டது.அந்தக் கட்டுரை முழுவதும் இலங்கையில் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் பயிற்சிகள் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதாகவும் அபாண்டமான ஒரு பொய் கதை புனையப் பட்டிருந்தது.

லக்பிம செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள் அனைத்தும் தீவிரவாத இயக்கங்களின் தொடர்புடன் செயல்படுவதாகவும் அவ்வமைப்புகள் மூலம் கிடைக்கும் நிதியினால் இங்கு சமுதாய சேவைகள் செய்வதைப் போல் காட்டிக்கொள்வதாகவும் லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மையில் இலங்கையில் இருக்கும் தவ்ஹீத் அமைப்புகள் தீவிரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ளதா? அப்படியிருந்தால் அதற்குறிய ஆதாரம் என்ன? என்பவற்றையெல்லாம் லக்பிம வெளியிடுமா?

சவூதியிலிருந்து பணம் எடுத்து பள்ளி கட்டுதல்,கிணறு கட்டுதல் போன்ற வேலைகளை செய்யும் சில அமைப்புகளின் பெயர்களையும் குறிப்பிட்டு அந்த அமைப்புகள் எல்லாம் லக்ஷர் ஏ தய்யிபா மற்றும் அல்உம்மா போன்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து இலங்கையில் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா?

லக்பிம ஆங்கில நாளேட்டின் மேற்குறிப்பிட்ட செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும்  மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.

அது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்தது இந்த அமைப்பே. அல்ஹம்துலில்லாஹ்!

இருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று இறைவனது கிருபையால் சுமார் 15 லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.

இப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.

TNTJ வின் நிறுவுனர் பி.ஜைனுலாப்தீன் என்பவர் யார்?

தமிழுலகு அறிந்த பிரபல இஸ்லாமிய அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவுனருமான சகோதரர் பி.ஜே அவர்களை லக்பிம நாளேடு ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அவர்தான் இங்கு தீவிரவாத பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பி.ஜே தீவிரவாதியா?

கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.

1980களிலிருந்து தமிழகத்தில் விடுதலைப் புலிகளை எதிர்து வந்த ஒரே தலைவர் இவர்தான்.

இலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் பி.ஜெ

தமிழக முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.

இருதியாக கடந்த நோன்புப் பெருநாள் அன்றும் தீவிரவாதத்தை எதிர்த்துத் தான் பகிரங்க பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லக்பிம பத்திரிகை ஆசிரியரே கவணத்திற்கு.

உங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தையும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.

பி.ஜைனுலாப்தீன் அவர்கள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா?

டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது?

கலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா?

மன்மோகன்சிங்குடன் பி.ஜே பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம் செய்தி வெளியிடுமா?

அத்துடன் தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் நிறுவுனதையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆகிய நாம் இங்கு பல பணிகளை செய்து வருவதும் தீவிரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தாங்கள் அறியாத ஒன்றல்ல.

சவூதியில் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக 75000ம் ரூபா நிதியுதவி அளிக்கப் பட்டதும் இந்தச் செய்தி லங்காதீப தினகரன் போன்ற பத்திரிக்கைகளிலும் ஹிரு எப்.எம்.போன்ற வானொலி சேவைகளிலும் அது ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அது போல் லேடி ரிஜ்வே மறுத்துவமனைக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக பல முறை மருத்துவ உபகரண உதவி மேற்கொள்ளப் பட்டதும் அவை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.