இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்கா கும்பல் தலைவன் தலைமறைவு!

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்க கும்பல் தலைவன் தலைமறைவு!

கடந்த 24-7-2009 அன்று இரவு 12 மணி அளவில் பேருவேளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் புகாரி தரீகாவை சேர்ந்த கும்பல் கொலைவெறியுடன் கூர்மையான வாழ்களுடன் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். மாஹிர், முஹம்மது ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’

srilanka_6

தாக்கப்பட்டதில் நான்கு பேரின் நிலை மிகவும் கலலைகிடமாக உள்ளது.

பள்ளிவாசலுக்குள் நுழைந்த இக்கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி பள்ளிவாசலுக்கு தீ வைத்து குர்ஆன் பிரதிகளை கிழித்து பற்றவைத்துள்ளதுள்ளனர்.

பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள மதரஸா மற்றும் வைத்திய சாலைக்கும் தீ வைத்துள்ளனர். பள்ளிவாசல் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களும் இக்கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

srilanka_4srilanka_3

இக் கும்பலின் தாக்குதல்களை கொஞ்சமும் எதிர் பாராத அப்பாவி பொது மக்கள் பள்ளிவாசலிலிருந்து தப்பியோடி கழிவறைக்குள் புகுந்த போது அங்கேயும் சென்று அவர்களை வேட்டி சாய்த்தனர் இக்கயவர்கள்.

கான்ங்கிரிட் தூண்களை எடுத்து தலையில் அடித்து தாக்கினர். வாலால், தலையிலும் நேற்றியிலும் கழுத்திலும் தாக்கினர். சம்பவ இடத்தில் இறந்து போன சகோதரரின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது.

பள்ளிவாசல் உள்ளேயும் கழிவறையிலும் பள்ளியின் வெளிப்புறத்திலும் இரத்தம் உரைந்து கிடைந்தது.

srilanka_1srilanka_8srilanka_7

கொலை வெறிபிடித்த தரீகா கும்பல் பள்ளிவாசலின் புனிதத்தை கெடுத்து நாசப்படுத்தினர்.

“லாஇலாஹ இல்லல்லாஹு ஷைகு நாயகம் வலியுல்லாஹ்” என கோஷமிட்டே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். காயப்ட்ட அப்பாவி மக்கள் கதறும் போது, “யா முஹியத்தீன் யா முஹியத்தீன்” எனக் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு வந்த இக்கும்பல் வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். அனைவரின் கைகளிலும் வாட்கள் இருந்தன.

இத்தாக்குதலுக்கான முழு அங்கிகாரமும் திட்டமிடுதலும் புகாரி தரீகா ஷைகு நாயகம் அஹ்மத் பின் முஹம்மது வழங்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இத்தாகுதலில் தொடர்புடைய ஷைகு தலைமறைவாகி விட்டான்.

இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்திருந்தால் சேதங்களை; தடுக்கப்பட்ருக்கும் ஆனால் அவர்கள் உடனே வரவில்லை.

தாக்குதலில் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போது, அவர நான்கு வயது குழந்தை ”எனது வாப்பாவை என்ன செய்கின்றீர்கள்’ என கூறியது போது ஜனாசாவில கலந்து கொண்டவர்கள் கண்கள் கலங்கின!

இவ்வளவு நடக்க காரணம் அந்த பள்ளியில் அல்லாஹ்விற்கு யாரையும் வைக்காதீர்கள் என்று கூறியது தான்.

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜும்ஆப் பள்ளியில் நடந்த ஜும்மா உரையில் புகாரி கந்துரி என்ற பெயரில் நடந்த அனாச்சாரங்களைக் கண்டித்தும், அங்கு நடைபெற்ற ஓரிறைக் கொள்கைக்கு எதிரான இணைவைப்பான காரியங்களை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைக் கிளையின் பேச்சாளர் சகோதரர் ரியாஸ் (M.I.Sc) அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த உரையில் சகோதரர் ரியாஸ் பிரதானமாக கந்தூரி திருவிழாவில் கலந்துகொள்ளும் ஆண், பெண் இருபாலாரும் ஒட்டியுறவாடிக் கலந்துகொள்வதும், அதில் நடைபெறும் அசிங்கங்களும், மாற்றுமத நிகழ்வுகளைப் பின்பற்றும் அலங்கரிப்புகளும், அல்லாஹ் அல்லாதவர்களை உதவி தேடி அழைத்து அறுத்துப் பலியிடுதல் போன்ற காரியங்கள் இணைவைப்பானவையென்றும், அதை செய்பவர்கள் முஷ்ரிக்குகளென்றும் இதுகாலவரையில் இலங்கை வரலாற்றில் எந்த ஆலிமும் கூறாத அளவுக்குப் பகிரங்கமாக உடைத்துக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பள்ளிவாசலை எரித்து தாக்குதல் நடத்திய தரீக்க கும்பல் தலைவன் தலைமறைவு!

ஏகத்துவ பிரச்சாரத்திற்கு வாய் மூலம் பதில் சொல்ல தைரியம் துணிச்சல் இல்லாமல் அல்லாஹ்வின் இல்லத்தை எரித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இத்தரீக்கா கும்பல், ஏக இறைவனான அல்லாஹ்வுடன் போர் புரிகின்றார்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

அல்குர்ஆன்-9:32

விடியோ காட்சி:

இந்த சம்பவம் தொடர்பாக நமது இணையதளத்திற்கு தகவல்,புகைப்படங்கள்,வீடியோ அனுப்பியவர்கள்:
லண்டன் வாழ் இலங்கை சகோதரர் ஒருவர்
ஷிஹானா சஃபி
ஹிகாம்
ரஸ்மி