இலங்கையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

ilangai_tntj_ssuilangai_tntj_abbasஜமாஅத்துத் தவ்ஹீத் TNTJ இலங்கை யின் நிர்வாகக்குழு கடந்த 7-3-2009 அன்று இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது. TNTJ யின் தனிக்கை குழு உறுப்பினர் S.S.U சைபுல்லாஹ் தலைமை தாங்கினார்கள். மாநிலப் பேச்சாளர் அப்பாஸ் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

தலைமையகம் உருவாக்கப்பட்டு ஜும்மா ஆரம்பித்தல்

தௌஹீத் ஜமாஅத் TNTJ இலங்கை என பதிவு செய்தல்

நிர்வாக குழுக்கான ஆலோசனை கூட்டம் வாராந்தம் நடாத்தப்படும்

உறுப்பினர் படிவம் வழங்கி அடையாள அட்டை வழங்குதல்

நன்கொடைகளுக்கான ரசீது புத்தகம் அடித்தல்

வங்கிக் கணக்கு (Joint Account) ஆரம்பித்தல்

வாராந்த வகுப்பு, தெருமுனை பிரச்சாரம், மாதம் ஒருமுறை மாபோலை பாடசாலையில் பெரிய நிகழ்ச்சி நடத்தல்.

இரத்தவகை கண்டறிதல், இரத்ததான முகாம், இலவசமாக பாடசாலை உபகரணங்கள், சீருடை வழங்கள்.

துண்டு பிரசுரங்கள் மூலம் தஃவா, மருத்துவமனை சென்று நோயாளிகளை சந்தித்து தஃவா செய்தல்

தலைமையகத்தில் ஊனு, புத்தக நூலகம் ஒன்றை உருவாக்குதல்

வுNவுது அமைப்பே ‘தௌஹீத் ஜமாஅத் TNTJ இலங்கையினை மேலாண்மை செய்யும். பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின் TNTJ தான் மத்தியஸ்தம் வகிக்கும்.

பின்வரும் நபர்கள் ஜமாஅத்துத் தவ்ஹீத் TNTJ இலங்கை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் -ஸர்பராஸ்

துணைத்தலைவர் – அக்ரம்

செயலாளர் – அப்துர் ரஹ்மான்

துணை செயலாளர் – அஸ்கர்;

பொருளாளர் – அஸ்வான்