இலங்கையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி

இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கழுத்தரை மாவட்டம் மதுகமை. தொடங்கொடை என்ற இடத்தில் கடந்த 04.04.2010 அன்று   புதிதாக  இஸ்லாத்தை எற்றுக் கொண்டவர்களுக்காண இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற தலைப்பில் மவ்லவி ரிஷாப் M.I.Sc அவர்கள் உறையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட சகோதரர்களுக்கு மவ்லவி P.J அவர்களின்  திருக் குர்ஆன் தமிழாக்கமும் , இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் இலங்கைத் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ரகீப் துணைத் தலைவர் சகோதரர் அப்துர் ராசிக் செயலாளர் ரியாஸ்தீன் மற்றும் மவ்லவி முஆத் M.I.Sc ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்வத்துடன் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.