இராமநாதபுரம் TNTJ ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!

rmd_ambulance_1rmd_ambulance_2கடந்த 12-6-2007 செவ்வாய்கிழமை இரவு சுமார் 7.40 மணி அளவில் இரநாமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் இறைவன் துணை கொண்டு இராமநாதபுரம் மாவட்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இனிதே நடைபெற்றது.

இராமநாதபுரம் துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் அவர்களால் ஆம்புலன்சுடைய சாவியை மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ஹமீதுவிடம் கொடுத்து நிகழ்ச்சி தொடங்கியது. இதில் துணை கண்காணிப்பாளர் அவர்களது சிற்றுரையுடன் விழா தொடங்கியது.

பின் மாவட்ட தலைவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனித நேய சேவைகள் எங்கனம் நடைபெற்று வருகின்றது, ஜமாஅத்தின் நோக்கம் குர் ஆன் ஹதீஸாக மட்டும் இருந்தாலும், இறைவனும் இறைத்தூதரும் சாதி மத பேதமின்றி சேவையாற்றிட வலியுறுத்தியதையும் அதன் அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமூக சேவையாற்றி வருகின்றது என்று பட்டியலிட்டு காட்டினார்கள் மேலும் தமிழகத்தில் இரத்த தானம் செய்யக் கூடிய அமைப்பில் தற்பொழுது முதலிடத்தில் இருந்து வருவதையும் நினைவு கூறினார்கள்.

அடுத்து மலேசிய தொழிளதிபர் சகோ. ஆ. எஸ். மைதீன் கனி அவர்கள் நமது சேவைகளைப் பாராட்டி பேசினார்கள். பின் அவரது சகோதரரும் கோலாலம்பூர் தொழிளதிபருமாகிய சகோ. ஆர். எஸ். அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தைப்பற்றி கேள்விப்பட்ட அவதூறுகளையும் பின் சகோ.பி. ஜெ. அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை பற்றி கேள்விப்ட்ட அவதூறுகளையும் அதன் சிறப்பையும் பற்றி சிற்றுரையாற்றினார்கள்.

பின் சகோ. அன்பின் ஹஸன் ( கிழை கிளைத் தலைவர் ) அவர்கள் விழாவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை வாசிக்க மக்கள் அனைவரும் அல்லாஹ் அக்பர் என்று ஆவேசக் குரல் எழுப்பினார்கள்.

மாவட்ட தலைவர் ஏகத்துவம் தீன் குலப் பெண்மணி மற்றும் உணர்வு இதழ்களின் சிறப்பையும் அவசியத்தையும், கண்டிப்பாக அனைவரும் சந்தாதாரர்களாகவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். இறுதியாக சகோ. பி. ஜெ. அவர்கள் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இரண்டு சகோதரர்களாகித் தொடங்கி இன்றுவரை தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் தியாகங்கள் இன்றி இடையில் வந்து வளர்ந்தவர்களைப்பற்றியும் எங்கனம் இந்த ஜமாஅத் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கண்டது என்பதை சுருக்கமாக எடுத்து வைத்தது வந்திருந்த மக்களில் அதிகமானவர்களை கவர்ந்து இவ்வளவு கஷ்டடத்திலும் வேதனையிலுமா? இந்த ஜமாஅத் வளர்ந்தது, கஷ்டப்பட்டவர்கள் ஒரம் தள்ளப்பட்டு சுகமனுபவிப்பவர்கள் யார் என்ற விளக்கத்தையும் தெளிவாக அறிந்ததாக கூறியது நம் செவிகளில் ஒலித்தது. மேலும் தமுமுக தொடங்கப்பட்ட பொழுது எந்த வாக்குறுதியை கொடுத்து மக்களை ஒன்று சேர்த்தோமோ அதை இன்ஷா அல்லாஹ் இறுதிவரை இந்த ஜமாஅத் உறுதியாக இருக்கும், எந்த வாரியத்திற்கோ அல்லது எந்த பதவிக்குமோ இந்த ஜமாஅத்தை அடகு வைக்க அல்லது விலை பேச ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்று உறுதியிட்டுக் கூறினார்கள். ஒரு சோகமான வரலாற்றை அறிந்த மன வேதனையுடனும் இன்று இந்த ஜமாஅத் செய்துவரும் சேவைகளையும் அறிந்த மகிழ்ச்சியுடன் மக்கள் கலைந்து சென்றனர்.

அன்று மாலை சுமார் 6.00 மணிக்கு பிரஸ் மீட் ( நிருபர்கள் சந்திப்பு ) நடந்தது. இதில் தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி மற்றும் ஜெயா டிவி, அபர்ணா டிவி, சன் டிவி நிருபர்களும் வந்திருந்தனர். துவக்கமாக மாவட்ட தலைவர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகளின் வரிசையில் இந்த ஆம்புலன்ஸூம் ஒன்று என்றும் மற்ற சமூக சேவைகளையும் விவரித்த பின், மாநிலத் தலைவர் சகோ. பி. ஜெ. அவர்கள் அரசும் அரசியல் கட்சிகள் எங்கனம் முஸ்லீம்களுக்கு துரோகம் விளைவித்தன, வார்த்தை ஜாலங்களால் எங்கனம் இந்த சமுதாயம் ஏமாற்றப்பட்டது, மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு எங்கனம் அமல் படுத்தப்பட்டுள்ளது, மேலும் தற்பொழுது ஜூலை நான்கு எங்கனம் நடத்தப்பட உள்ளது, எங்கெங்கு நடைபெற உள்ளது என்பன போன்றவைகளை எடுத்துரைத்த பின் நிருபர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.

விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மேலக்கோட்டை சகோதரர் அப்துல் கபூர் ( ரியாத் மண்டல பொறுப்பாளர் ) அவர்கள் தலைமையுடன் மாவட்ட செயளாலர் சகோ. ஜெ. ஆரிப்கான் மற்றும் இராமநாதபுரம் நகர் தலைவர் சகோ. எஸ். ஜாஹிர் அலி, செயளாலர் எஸ். பாருக் அலி, பொருளாலர் ஜெ. அப்துல் ஜலீல் ஆகியோர்களும் விழா கண்காணிப்பாளராக பனைக்குளம் வருசை முஹம்மது அவர்களும் மிகச் சிறப்பாக செய்தனர்.