இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

21.02.2009 அன்று காலை 10மணி அளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் சகோ.ஸைஃபுல்லாஹ்கான் தலைமையில் மற்றும் மாவட்ட செயலாளர் சகோ. ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் சகோ.மாலிக், மாவட்ட துணைத் தலைவர் சகோ.முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் சகோ.மாஹின் அபுபக்கர், மருத்துவ சேவை அணி சகோ.முகைதீன், மாணவர் அணி சகோ.இம்ரான்கான், தொண்டர் அணி சகோ.காதர் ரிஸ்வான், வர்த்தக அணி சகோ.காதரியா முஸ்தபா இவர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிநாட்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக சகோ:சிராஜ் அவர்கள் (தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல பொருளாளர், ரியாத்வாழ் இராமநாதபுரம்மாவட்ட தவ்ஹீத்கூட்டமைப்புத்தலைவர்) ‘இறையச்சம்’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

மாநில பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ‘நிர்வாகிகளின் பண்புகள்’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் வெளிநாட்டு நிர்வாகிகளை மாவட்டத்தலைவர் அறிமுகம் செய்துவைத்தார்.

இதுநாள்வரை மாவட்ட மாணவரணி செயளாளராக செயல்பட்டுவந்த சகோ:இம்ரான் கான் மாவட்டதுனை செயளாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்டமாணவரணி செயளாளராக புதுவலசையை சேர்ந்த சகோ:முஹம்மது யாஸின் நியமிக்கப்பட்டார்.

இராமநாதபுரத்தில் உள்ளகிளைகள் (8)எட்டு பகுதிகளாக பிரித்து தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளில் நம்ஜமாஅத்தின் பணிகளான ஏகத்துவபிரச்சாரம் & தாவா இவைகளை இன்னும் வீரியத்தோடு செயல்பட ஊக்குவிப்பது.

1.இன்ஷாஅல்லாஹ் கிளைகள்தோறும் தனிப்பள்ளிஅமைத்து ஐவேளை தொழுகை ஜூம்மா தொழுகைகளை தனித்து நிறைவேற்றுவது.

2.பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களான ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்குள்ளாக அனைத்து கிளைகளிலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்தி முடிப்பது என முடிவுசெய்யப்பட்டது.

அதற்குத்தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவேண்டும்.

பொருப்பாளர்கள் & கிளைகள்:

சகோ:ஹலிஃபுல்லாஹ் -9842903008(தொண்டி)
1.தொண்டி 2.ளு.P பட்டிணம் 3.மங்களக்குடி 4.நம்புதாளை 5.R.S.மங்களம் 6.திருப்பாலைக்குடி.
சகோ:பஷீர் -9952817165(வேதாளை)
1.இராமநாதபுரம் 2.சக்கரக்கோட்டை 3.மேலக்கோட்டை 4.தீன்நகர் 5.சாத்தான்குளம்.

சகோ:இம்ரான் கான் -9894773767(மன்டபம்)
1.இரமேஸ்வரம் 2.தங்கச்சிமடம் 3.மண்டபம் 4.மரைக்காயர்பட்டிணம் 5.வேதாளை.

சகோ:செய்யது -9443920041(தேவிபட்டிணம்)
1.பனைக்குளம் 2.புதுவலசை 3.அத்தியூத்து 4.சித்தார்கோட்டை 5.தேவிபட்டிணம்.

சகோ:ஜின்னா -9994051916(பெரியபட்டிணம்)
1.பெரியபட்டிணம் 2.வன்னாங்குன்டு 3.புதுமடம் 4.இருமேணி.

சகோ:சுலைமான் -9952772242(நரிப்பையூர்)
1.நரிப்பையூர் 2.பெருநாளி 3.சாயல்குடி 4.வாலிநோக்கம் 5.சிக்கல்.

சகோ:ஹாஜா -9944436457(கீழக்கரை)
1.கீழக்கரை(நகர்) 2.கீழக்கரை(தெற்கு)3.நத்தம் 4.ஏர்வாடி.

சகோ:ஜஹாங்கீர் -9994079991(பரமக்குடி)
1.பரமக்குடி 2.எமனேஸ்வரம் 3.முதுகுளத்தூர் 4.அபிராமம்.

பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

சகோ:இம்ரான் கான் (மாவட்டதுனைச்செயளாளர்)வாசிக்க பொதுக்குழுஉறுப்பினர்கள் கைகளைஉயர்த்தி அல்லாஹூஅக்பர் என்றுகூறினர்.
1. இராமநாதபுரம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் விரைவு படுத்தி மொத்தமாக தோண்டி போடாமல் ஒவ்வொரு பகுதியாக விரைந்து முடிக்கும் படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

2. இந்தியாவின் தென்பகுதி முழுவதும் பயன்தரக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்கும் படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3. இராமேஸ்வரம் வரையிலும் உள்ள அகல ரயில் பாதையை 300 கோடி ரூபாய் செலவழித்து அமைத்தும் கூட போதுமான போக்குவரத்து சேவை இல்லாமல் உள்ளது. அதனால் அதிகமான ரயில்களை இயக்கி மக்களுக்கு சரியான வசதி செய்யும்படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

4. இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் X-Ray எடுக்க கூடிய வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அவசர காலங்களில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக 24 மணி நேர X-Ray சேவையை துவக்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

5. இராமநாதபுரம் வெளிபட்டிணத்தில் உள்ள கொழும்பு ஆலிம் ஸ்கூல் அருகில் உள்ள பள்ளி வாசல் ஊரணியில் சாக்கடை நீர் கலந்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு உடனடியாக சுத்தம் செய்து மாற்று வழி ஏற்படுத்தும்படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

6. தமிழக பட்ஜெட்டில் வழக்கம் போல் முஸ்லீம்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம்களின் நீண்ட நாள் கோரிக்கையான மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டில் வெள்ளை அறிக்கை, வட்டியில்லா கடன் திட்டம், கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பின்னும் முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தவறியது போன்ற முஸ்லீம் சமுதாயத்தின் ஏராளமான கோரிக்கைகள் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் உலமாக்களுக்கு நலவாரியம் என்ற அறிவிப்பு மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு எந்த நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. பாரளுமன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்த பட்ஜெட் கருதப்பட்டும், முஸ்லீம் சமுதாயத்தினர் நலன் மட்டும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 60:4-9 குர்ஆன் வசனத்தை ஆதாரமாகவைத்து நிர்வாகிகள் அனைவரும் நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு ஒவ்வொரு கிளைகளிலும் மற்ற ஜமாஅத்தார்களை புறக்கணித்து தனித்து செயல் படவேண்டும் என்றும், 9:107-108 குர்ஆன் வசனத்தை ஆதாரமாக வைத்து வக்த் தொழுகைகளையும்இமற்றும் ஜீம்ஆ தொழுகைகளையும்; நிறைவேற்றினால் அல்லாஹ் வெற்றியைத் தருவான் என்று மிகத்தெளிவாக விளக்கினார்.

இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 2.30 மணியளவில் பொதுக்குழு துவாவுடன் நிறைவுற்றது. லுஹர் தொழுகை முடிந்தவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.