இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.  இறுதியில் கடந்த 16.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் ஆகியோர் கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளை பொருளாளர் அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.