இரத்த தான சேவை பாராட்டி தஞ்சை வடக்கு TNTJ விற்கு விருது

கடந்த 02.10.10 சனிக்கிழமை அன்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், குருதி கொடையாளிகள் சங்கம் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சேவை பாராட்டு விழாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது.

இதை மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்களும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காதர் மீரான் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.