இரத்த தான சேவையை பாராட்டி திருவாரூர் TNTJ விற்கு விருது!

கடந்த 02.10.10 சனிக்கிழமை அன்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், குருதி கொடையாளிகள் சங்கம் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சேவை பாராட்டு விழாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.