இரத்ததான முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும்
தீவிரவாத எதிப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி கிளை சார்பாக இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி கடந்த 29/09/2019 அன்று சிறப்பாக நடந்தது.
இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டனர்  இரத்ததானம் கொடுக்க தகுதிப்பெற்றவர்கள் என்ற அடிப்படையில் 57 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
தீவிரவாதத்தை வேரறுத்து மனிதநேயத்தை போதிக்கும் இஸ்லாம் என்ற கருத்தில் அடங்கிய வாசகங்கள் பொதிந்த ஒளி நாடாக்கள் இரத்ததான முகாமில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
பிறமத மக்களும் இரத்ததானம் செய்ய ஆர்வம் கொண்டனர்.திருத்தணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நீங்கள் இரத்ததான முகாம்  நடத்தியதிலிருந்துதான் நான் தொடர்ந்து உங்கள் முகாமில் இரத்ததானம் செய்துக்கொண்டிருக்கிறேன் தொடர்ந்து முகாம்கள் நடத்தும் பொழுதெல்லாம் அழைப்புக்கொடுங்கள் என்று கூறி மத வேறுபாடின்றி மனிதநேயப்பணி செய்ய துணை நின்றனர்.