துபையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக  கடந்த 19-11-10 வெள்ளி அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அல் வஸல் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இம்முகாமிற்கு மண்டல தலைவர் முஹம்மது நாசிர் M.I.SC அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

காலை 8.00 மணியிலிருந்து மதியம் 3.00 மணி வரை நடந்த இம்முகாமில் 170 கலந்து கொண்டனர். மேலும் 153 சகோதரர்கள் குருதி கொடை அளித்தனர்.

அல்கூஸ்,ஜபல் அலி,சத்வா,சோனாப்பூர்,ஹோர் அல் அன்ஸ்,கிஸைஸ்,தேரா ஆகிய கிளையிலிருந்து பல சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் மகாராட்டிரா, பாகிஸ்தான்,கேரளா மற்றும் ஸ்ரீலங்கா சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி ஹுசைன் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!