இன்ஷா அல்லாஹ் ரமளானில் மாநிலம் முழுவதும் மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சிகள்

TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம் 3/08/09 திங்கள் கிழைமை அன்று மாலை
மாநில தலைமையகத்தில் நடைபெற்றது, இதில் TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி, மாநில
பொது செயளாளர் அப்துல் ஹமீது, மாநில பொருளாளர் சாதிக் மற்றும் மாநில மாணவரணி செயளாளர் S.சித்தீக், மாநில மாணவரணி துணை செயளாளர்கள் N. அல்அமீன், S.ஷமீம், K. பஷீர், சென்னை மண்டல மாணவரணி செயளாளர் K.சித்தீக்
ஆகியோர் கலந்து கொண்டு மாணவரணியின் வருங்கால செயல் திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்தனர்,

இதில் கல்லூரிகளில் மாணவரனியை ஒருங்கினைப்பது, நமது ஜமாத் சார்பாக நடத்தபடும் பொது கூட்டங்களில் கல்வியின் அவசியத்தை வலியுறித்தி பிரச்சாரம் செய்வது, மாணவரனியின் செயல்பாட்டை அதிகப்படுத்த மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது , மேலும் இந்த ரமலானில் மாநிலம் முழுவதும் மாணவரனி சார்பாக இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது, ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,

இறுதியில் இன்ஷா அல்லாஹ் ரமலானில் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும்முடிவெடுக்கப்பட்டது,