இனிய மார்க்கம் நிக்ழ்ச்சி -அபுதாபி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துக் கொண்ட கட்டுரையாளர்கள் பலர் இஸ்லாம் குறித்த தங்களின் சந்தேகங்களை தங்களின் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தனர். இத்தகைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியின் போதே இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

ஆனால் சில கட்டுரையாளர்களுக்கு தங்களின் அலுவல் காரணமாக சென்ற ஃபெப்ருவரி 3ம் தேதியன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

இதனைத் தொடர்ந்து கலந்துக் கொள்ள இயலாத கட்டுரையாளர்களுக்கென சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 16-02-2012 அன்று ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கட்டுரையாளர்கள் மட்டுமின்றி ஆர்வமிக்க சில பிற மத சகோதரர்களும் கலந்துக் கொண்டனர்.

பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.

கேள்விக்கேட்ட சகோதரர்களுக்கு சகோ.பீஜே மொழிப்பெயர்த்த குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐகாட் சிட்டிக்கிளைத் தலைவர் சகோ. கான்ஷா அவர்களின் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.