இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மாபெரும் இரத்த தான முகாம்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மாபெரும் இரத்த தான முகாம்இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மாபெரும் இரத்த தான முகாம்இந்திய சுதந்திர தினத்தை முன்னீட்டு கர்நாடக தௌஹீத் ஜமாஅத்தும் பௌரிங் மருத்துவமனையும் இனைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.

கர்நாடக தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் முகம்மது கனி அவர்கள் தலைமை ஏற்று நடத்திய இந்த இரத்த தான முகாமில் ஆண்கள் பெண்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்டோர் ஜாதி, மதம் மற்றும் மொழி பேதமின்றி ஆர்வத்துடன் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வண்ணம் இரத்த தானம் செய்து சிறப்பித்தனர்.

மேலும், 300 க்கும் மேற்பட்டோர் இரத்த பிரிவு சோதனை செய்துப் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புலிகேசி நகர் MLA திரு:பிரசன்னகுமார், KG ஹள்ளி காவல் நிலையக் கண்காணிப்பாளர் திரு: T. ரங்கப்பா, கர்நாடக மாநில விடுதலைச் சிறுத்தை தலைவர் திரு: மூர்த்தி மற்றும் இளைஞர் காங்கிரஸ் DJ ஹள்ளி பிளாக் தலைவர் திரு:J. வில்லியம் ஆகியோரே கலந்துக்கொண்டனர். KTJ துணைத் தலைவர்: SA சுலைமான் மற்றும் KTJ பெங்களுரு மாவட்ட தலைவர் KA சித்திக் ஆகியோரே கலந்து கொண்டனர்.

KTJ வின் தலைவர் M. இஸ்மத் கான் நன்றயுரையுடன் நிகழ்ச்சி முடிவுப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பெங்களுரு மாவட்டம் KG ஹள்ளி கிளைச் சகோதிரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!