ஆவூர் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி

DSC00335DSC00340தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 21.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவூர் TNTJ மர்க்கஸில் பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி:ஜெசீமா அவர்கள் தலைமை தாங்கினார், அந்நூர் இஸ்லாமிய கல்லூரி தலைமை ஆசிரியை சகோதரி:சபுர் நிசா அவர்கள் மவ்லீதும், மீலாதும் நபி வழியா ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் அந்நூர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை சம்சாத் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவமும், தொழாதவதரின் மறுமை நிலையும் ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி சித்தி அய்யூன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார், இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.