ஆவூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 07.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ஹபீப்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை து. தலைவர் முஸ்தபா மற்றும் கிளை து.செயலாளர் ஜாபிர் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் சகோ:இர்ஷாத் அலி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் கிளை செயலாளர் முபாரக் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக ஜாகிர் ஹுசைன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.