ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 21.01.11 வெள்ளிக்கிழமை அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அவர்கள் ஜன27 க்கான கிளையின் ஆயத்த பணிகளை விளக்கியபின், கூட்டம் இனிதே துஆவுடன் நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.