ஆவடியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் -ஆவடியில் மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி கடந்த 30.11.10 செவ்வாய் அன்று காலை 10மணி முதல் மாலை 6மணிவரை ஆவடியில் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

இதில் ஷரீஃப் அவர்கள் “அன்றாட வாழ்வில்” என்ற தலைப்பிலும் சகோதரர் E.முஹம்மது அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

சகோதரர் E.ஃபாரூக் அவர்கள் “ஜனாஸா பயிற்சி” வகுப்பை  நடத்தினார்கள்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் எழுப்பிய மார்க்க சந்தேகங்களுக்கு குர்-ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள்.