பஹ்ரைனில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் இறைவனின் அருளால் கட்நத 30-4-2010  ஆன்லைன் மூலம் நேரடி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்க அறிஞர் சகோதரர் பீ.ஜெயனுலாபுதீன் அவர்கள் “இட ஒதுக்கீடு போராட்டம் ஏன்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதன் பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், தஜ்ஜாலுக்கு ஏன் அல்லாஹ்
அளப்பெறிய சக்தியை கொடுத்தான்?,

இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு எல்லா அமைப்புக்களையும் ஏன்
அழைக்கவில்லை?

எனப் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்க்கு தெளிவாகவும் ஆணித்தரமாகவும்
பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 110 பேர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் TNTJ
மர்கசில் தப்சீர்,அரபி இலக்கணம்,தஜ்வீத் மற்றும் குர் ஆன் ஓதும் அடிப்படை பயிற்சி வகுப்பு என
பல்வேறு மார்க்க வகுப்புகள் நடக்கின்றன.

இதில் தஜ்வீத் வகுப்புக்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதற்க்கு முன்னர் அன்று மதியம் நடந்த செயற்குழுவில், வரவிருக்கின்ற ஜூலை 4 மாநாட்டிற்கு எப்படி உறுப்பினர்கள் உழைக்க வேண்டும் என்று மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் மார்க்க அறிஞர், சகோதரர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் உரையாற்றினார்.

அதன் பின்னர் மண்டலத் தலைவர் சகோதரர் முனீப் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலப்
பொருளாளர் சகோதரர் முபாரக் அவர்கள் மாநிலத் தலைமையிலிருந்து அனுப்பிய மாநாட்டுக்கான
செலவுத் தொகைத் திட்டத்தை படித்தார்.

பின்னர் மாநாட்டிற்கு நான்கு இலட்ச ரூபாய் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.அல்லாஹுவின் கிருபையால் செயற்குழுவிலேயே ஒரு இலட்ச ரூபாய்க்கான தொகை நிர்வாகிகளால் எழுதப்பட்டது. இந்நிகழ்சிகளை பஹரைன் TNTJ சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்