ஆலங்குடியில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 7-2-2010 அன்ற நேஷனல் டியுசன் சென்ட்டரில்காலை 9.30 முதல் 01.00 மணி வரை பொதுத் தேர்வு பயிற்சி முகாம் மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் M. சேக் ஒலி தலைமை வகித்தார்.

நகர டி.என்.டி.ஜே நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் k. சகோ. பசிர் அஹமது MCA அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் மாணவ மாணவியரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். ஆலங்குடி கிளை மாணவரணி செயலாளர் சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.