ஆறாம்பண்ணையில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையில் புதிய தாயிக்களை உருவாக்குவதற்கான  பேச்சு
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

அதில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக கடந்த 30.04.2010 அன்று ஆறாம்பண்ணை தவ்ஹித் மர்கஸ்ஸில் புதிய பேச்சாளர்கள் ஓர் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தாயி அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு புதிய பேச்சாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்  பேச்சு
பயிற்சி வகுப்புகளை அபுதாபி மண்டலம் முஸாபா கிளையின் நிர்வாகி சகோ.சிக்கந்தர்(கொங்கராயகுறிச்சி) அவர்கள் நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் புதிய பேச்சாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள். துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!