ஆர்.புதுப்பட்டினத்தில் சுன்னத் ஜமாஅத்தினரின் அராஜகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தைச்சேர்ந்த சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் சுன்னத் ஜமாஅத்தினரால் கடந்த 18-02-2011 அன்று கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

கிளை சார்பாக மவ்லீதை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதைப் பற்றி சகோதரர் நைனா முஹம்மது அவர்களின் தம்பி சகோதரார் குலாம் முஹம்மது பிரச்சாரம் செய்தார்கள். எங்களை கேவலப்படுத்தும் உன் தம்பியை அடக்க உன்னை ஒருவழிபன்னினால் தான் முடியும் எனக் கூறி கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனர்.