ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக் கூட்டம் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 1-4-2012 அன்று புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் சமுதாய எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி மஜ்லிசுல் உலமாவின் மடமை வாதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் மவ்லவி கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள், ஒரு பரேலவியின் பகல் வேஷம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

ஏராளமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.