ஆந்திராவில் முஸ்லிம்களின் உரிமை பறிப்பு!

ஆந்திராவில் உள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீடு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த காங்கிரஸ் முதல்வரான ராஜசேகர ரெட்டி மூலம் ஆந்திரா முஸ்லிம்களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீடு 2007ல் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பலனை அங்குள்ள முஸ்லிம்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஒரு வழக்கில் கடந்த திங்கள் அன்று (08-02-2010) தீர்ப்பு வெளியாகியது.

ஏழு பேர் கொண்ட பென்ச் அளித்த அந்த தீர்ப்பில் ஆந்திரா அரசு வழங்கியிருந்த அந்த ஒதுக்கீடு செல்லாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் இதுவரை இச்சலுகையால் பயன் அடைந்தவர்களுக்கு பாதிப்புகள் இருக்காது என்ற குறிப்பையும் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

தீர்ப்பு வெளியானவுடன் ஆந்திராவில் பல முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

இச்செய்தி சம்பந்தமான விரிவான விமர்சனங்கள் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.