ஆதீனத்திற்கு முட்டுக் கொடுத்து கேவலப்பட்ட பொய்யர்கள்

காஞ்சி சங்கராச்சாரியை நபிகள் நாயகத்தின் அவதாரம்’ என்று பேசிய மதுரை ஆதீனம் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அவரது மடத்தை முஸ்ம்கள் முற்றுகையிடுவோம் என டிஎன்டிஜே அறிவித்தது. இதனை அறிந்து உடனே டிஎன்டிஜே தலைமையகத்தை தொடர்பு கொண்ட மதுரை ஆதீனம், “நான் பேசியது உண்மைதான். அதற்கு, நான் வருத்தம் தெரிவித்து கடிதம் தருகிறேன் முற்றுகைப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்…” என்று கேட்டுக் கொண்ட செய்தியையும், டிஎன்டிஜே மாவட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்து வழங்கிய கடிதத்தையும், வருத்தம் தெரிவித்து தனது கருத்தை வாபஸ் வாங்கக் கூடிய கருத்துகள் அடங்கிய வாசகங்களை மதுரை ஆதினமே அவரது கைப்பட எழுதி அதை வாசித்து காண்பிக்கக் கூடிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரங்களும் www.tntj.net மற்றும் www.onlinepj.com ஆகிய இரு இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டது.

மதுரை ஆதினம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய விஷயம் அறிந்து ஒட்டுமொத்த முஸ்ம் சமுதாயமும் அவருக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பில் இருந்த வேளையில், பொய்யையே மூலத னமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு மட்டும் ஆதினம் அவ்வாறு பேசவில்லை என்று “மதுரை ஆதீனத்திற்கு வால் பிடித்து கொண்டு அவருக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது.

தங்களது அமைப்பின் விளம்பரத்திற்காக நபிகள் நாயகத்தின் கண்ணியத்தையே சீர்குலைக்கத் துணிந்த இந்த பொய்யர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கண்ணியத்தைவிட, மதுரை ஆதினத்தின் கண்ணியமே பெரிதாக தெரிந்துள்ளது. அதனால்தான் மதுரை ஆதினமே, “நான் அவ்வாறு பேசியது உண்மைதான். வேடிக்கைக்காக நான் அவ்வாறு பேசி விட்டேன். ஜெயந்திரரை முஸ்ம் மாதிரி என்று நான் சொன்னேன். நபிகள் நாய கத்தோடு அவ்வாறு விமர்சனப்படுத்தினேன்…” என்று நம்மிடம் உண்மையை ஒப்புக் கொண்டு அதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கி விட்ட நிலையிலும், அந்த வீடியோ காட்சிகளை இணையதளத்தில் நாம் வெளியிட்ட நிலையிலும், நான் வருத்தம் தெரிவித்த செய்தியை பெரிய அளவில் பெரிதுபடுத்தி விடாதீர்கள் என்று நம்மிடத்தில் அவர் கெஞ்சி கோரிக்கை வைக்கின்ற அளவுக்கு இறங்கி வந்து விட்ட நிலையிலும் இந்த அமைப்பினர் மட்டும் மதுரை ஆதீனம் அவ்வாறு சொல்லவே இல்லை.

நக்கீரன் வெளியிட்ட ஆதாரத்தில் கூட அப்படி இல்லை என்று இன்னும் மதுரை ஆதீனத்தின் அடிவருடிகளாக அவருக்கு கூஜா தூக்குவதன் மர்மம் நமக்குப் புரியவில்லை.

நாம் அறிவித்த மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடும் போராட்ட அறிவிப்புதான். “தான் பேசியது உண்மை என்று மதுரை ஆதீனத்தை ஒப்புக் கொள்ள வைத்து, அவரை வருத்தம் தெரிவிக்கவும் வைத்தது” என்ற செய்தி அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும் நிலையில் இந்த மூளை வெந்த அரைவேக்காடுகள் மட்டும் நம்முடைய முற்றுகை அறிவிப்பு மடத்தனமானது என்று பொய் செய்தியை பரப்பி தங்களது மடத்தனத்தையும், கயமைத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மதுரை ஆதினம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய விஷயம் அறிந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் பெரும் கொந்தளிப்பில் இருந்ததாகவும், கொந்தளிப்பில் இருந்த முஸ்ம் சமுதாயம், “மதுரை ஆதீனம் அவ்வாறு பேசவில்லை” என்று தாம் செய்தி வெளியிட்ட பிறகுதான் அமைதியானார்கள் என்று தாங்கள் பரப்பிய பொய்தான் முஸ்ம் சமுதாயத்தை மழு மட்டைகளாக்கியது என்று மார்தட்டிக் கொண்டு எழுதியுள்ளனர்.

இந்த விஷயத்திற்கெல்லாம் எடுத்த எடுப்பிலேயே முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்து வீரியமிக்க முற்றுகைப் போராட்டத்தை நாம் சாலை மறியல் ரேஞ்சுக்கு கொண்டு வந்து விட்டோமாம். நம் உயிரைவிட மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒருவர் இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதைக் கண்டித்து முற்றுகைப் பேராட்டம் அறிவிக்காமல், தங்களைப் போன்று அவ்வாறு பேசியவருக்கே நாமும் கூஜா தூக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள் போலும்.

இன்னுமொரு அண்டப்புளுகு :

அந்தப் பொய்யர்களிடம் விஷுவலாக சொன்ன விஷயத்தைத்தான் நம்மிடம் கடிதமாக மதுரை ஆதீனம் எழுதித் தந்தாராம். எவ்வளவு பெரிய அண்டப் புளுகை அவிழ்த்து விடுகிறார்கள் இந்தப் பொய்யர்கள். “நான் அவ்வாறு பேசவில்லை…” என்று சொன்னது பொய்யர்களிடத்தில் ஆதீனம் சொன்ன பொய். ஆனால் நம்மிடத்திலோ பேசியது உண்மைதான். வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரிலும் சொல் கடிதமும் வழங்கி இருக்கிறார். இப்படி இருக்க இரண்டும் ஒன்றுதான் என்று எப்படி இந்த பொய்யர்களுக்குத் தெரிந்தது என்று தெரியவில்லை.

மேலும் நம்மிடம் வழங்கிய அந்தக் கடி தத்தை, நம்மிடம் கொடுப்பதற்கு முன்பாகவே பத்திரிகைக்கு அறிக்கையாக அளித்து விட்டதாக கை கூசாமல் பொய்யை எழுதியுள்ளனர். ஜனவரி 1, 2010 வெள்ளி இரவு 8 மணியளவில் டிஎன்டிஜே தலைமையகத்தை தொடர்பு கொண்ட மதுரை ஆதீனம், “நான் பத்திரிகைக்கு ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்…” என்று கூறித்தான் பேச்சை ஆரம்பித்தார். அதில் அவர் அப்படி தான் பேசவில்லை என்ற ரீதியில் எழுதியிருந்த வாசகங்களை நம்மிடம் வாசித்தும் காட்டினார். “இதில் நீங்கள் எழுதியிருப்பதை நாங்கள் ஏற்க முடியாது… நீங்கள் அவ்வாறு பேசவில்லை என்று கூறுவது பொய். நீங்கள் பேசியதற்கான ஆதாரம் உள்ளது…” என்று நாம் கூறியவுடன்தான், தான் அவ்வாறு பேசியதாக ஒப்புக் கொண்டு, வருத்தம் தெரிவித்து கடிதம் அளிப்பதாக நமது நிர்வாகிகளை அழைத்தார்.

நம்மிடம் அவர் அளித்த கடிதத்தில் அவரது உதவியாளர் மூலம் எழுதப்பட்ட அறிக்கையில் உள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று நாம் மறுத்ததால்தான், வருத்தம் தெரிவிக்கக் கூடிய வாசகங்கள் அடங்கிய வரியை அவரே அவரது கைப்பட எழுதி வாசித்துக் காண்பித்து நம்மிடம் அளித்தார். இவ்வாறு இருக்க அவர் முன்னரே எழுதிய அறிக்கையைத்தான் நம்மிடம் வழங்கியதாக பொய்யை பரப்பி வருகின்றனர்.
மதுரை ஆதீனத்தை இவ்வாறு வரிந்து கட்டிக் கொண்டு பாதுகாப்பது, அவருக்கு இவ்வாறு வால் பிடிப்பதும் ஏன்? என்ற மர்மம் நமக்கு இதுவரை விளங்கவில்லை.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை! :

அதே நேரத்தில், “பாக்கர் அந்தப் பெண்ணுடன் சென்னையில் இருந்து கோவில்பட்டி வரைக்கும் வெறும் நான்கு மணி நேரம் மட்டும்தான் அதுவும் பகல் நேரத்தில்தான் பிரயாணம் செய்தார்…” என்று புளுகிய அந்த அமைப்பைச் சேர்ந்தவரே! “மதுரை ஆதீனம் பொய்தான் சொல்கிறார். நாம் கேட்டபொழுது அவர் நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லும்போது நாம் கண்ணியமான முறையில்தான் நடக்க வேண்டும்…” என்று செய்தியை பரப்பி, மதுரை ஆதீனம் “நான் அப்படி பேசவில்லை…” என்று சொன்னது பொய்தான் அது எங்களுக்கும் தெரியும் என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மதுரை ஆதீனம் பொய்தான் சொல்கிறார் என்று தெரிந்திருந்தாலும் எங்களிடம் பேட்டி தந்ததால் நாங்கள் அவருக்கு வால் பிடிப்போம் என்று அவருக்கு ஆதரவாக கொடி தூக்கும் இந்த இழி செயலை முஸ்ம் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

ஆதீனத்திற்கு முட்டுக் கொடுத்து கேவலப்பட்ட பொய்யர்கள் :

நபிகள் நாயகம் பற்றி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மதுரை மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் மதுரை ஆதீ னம் கடிதம் வழங்கும் புகைப்படத்தோடு, “சரண்டரான மதுரை ஆதீனம்” என்ற தலைப்பில் நக்கீரன் வார இதழ் செய்தியாக வெளியிட்டது. தாங்கள் மதுரை ஆதீனத்திற்கு வால் பிடித்து கேவலப்பட்ட செய்தியை மறைப்பதற்காக, தற்போது பொய்யர்கள் சில ஃபித்னாக்களை பரப்பி வருவதாக அறிகின்றோம்.
ஜவாஹிருல்லாஹ் ஆசிவாங்கியதும், டிஎன்டிஜே கடிதம் வாங்கியதும் ஒன்றா?

தான் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் திருவாவடுதுறை ஆதீனத்திடம் சென்று ஆசி வாங்கினார். இந்தச் செய்தி தினமணி நாளிதழில் படத்துடன் செய்தியாக வெளியானது. அதை விமர்சித்தவர்கள், “அனைவருக்கும் ஆசீர்வாதம் என்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆதீனம் எழுதியுள்ளாரே! அந்த வாசகங்கள் உங்களது கடிதத்தில் இடம்பெற சம்மதித்திருக்கலாமோ!” என்று கேள்வி கேட்டு பிரச்சினையை திசை திருப்ப முயல்கின்றனர்.

நிராகரிக்கப்பட்ட கடிதத்தின் முதல் பகுதி :

“அனைவருக்கும் ஆசீர்வாதம் என்பதுவரை ஆதீனத்தின் உதவியாளர் எழுதிய கடிதத்தை நம்மிடம் வழங்கியபோது, இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்தக் கடிதத்தில் உள்ள வாசகங்களை நாங்கள் மறுக்கிறோம்…” என்று நமது மதுரை மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள் நேரடியாக அவரிடத்தில் கூறியவுடன், “நான் உரையாற்றியதில் முஸ்ம்களின் மனம் புண்பட்டிருந்தால்…” என்று தொடங்கும் வாசகங்களை ஆதீனமே தனது கைப்பட எழுதி தருகிறார். அப்படி இருக்க, அவரிடம் நேரடியாகவே அதை மறுத்திருக்கும் நிலையில், ஆசி வாங்கியதாக இது எப்படி அமையும். அதனால்தான் எப்போது கடிதம் எழுதினாலும் அனைவருக்கும் ஆசீர்வாதம்’ என்று முடிக்கும் ஆதீனம், தனது கைப்பட எழுதிய வாசகங்களில் அவ்வாறு முடிக்காமல், இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முடித்துள்ளார்.

நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளா?

இதற்கு நாம் பதில் அளித்தவுடன், டிஎன்டிஜேவிற்கு ஆதீனம் அளித்த கடிதத்தில், எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று எழுதியிருக்கிறாரே! அது எப்படி இடம்பெற அனுமதித்தீர்கள் என்று கேட்டாலும் கேட்பார்கள். நாம் யாரும் கடவுளின் குழந்தைகள் அல்ல. மதுரை ஆதீனமாகிய நீங்கள் உட்பட அனைவரும் கடவுளின் அடிமைகள்தான் என்ற செய்தியையும், யார் ஆசி வழங்குவதால் எந்த ஒன்றும், எந்த ஒரு பொருளும் புனிதமாக ஆகி விடாது என்ற செய்தியையும், காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் டிஎன்டிஜே நிர்வாகிகள் மதுரை ஆதீனத்திடம் கூறியுள் ளார்கள் என்ற செய்தியையும் கூடுதலாக பதிவு செய்து கொள்கிறோம்.

நேரடியாக ஆசியை மறுத்த டிஎன்டிஜே நிர்வாகிகள் :

மேலும் அவர் ஆசி வழங்கிய பாலை நமது நிர்வாகிகளுக்கு வழங்கியபோது, “இதை நாங்கள் அருந்த மாட்டோம்…” என்று நமது நிர்வாகிகள் மறுக்க, “சாமியாரின் ஆசி பெற்றபாலாயிற்றே!” என்று அவரது உதவியாளர் கூற, “ஆசி வழங்கியதால்தான் மறுக்கிறோம்…” என்று கூறி நேரடியாகவே நீங்கள் ஆசி வழங்கியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று நிரூபித்திருக்கின்ற நிலையில், அனைவருக்கும் ஆசீர்வாதம்’ என்பதை நாம் ஏற்றுக் கொண்டதாக கூறுவது மற்றுமொரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்.

தேவைப்பட்டால் பதிலடி தொடரும் :

மேற்கூறிய விஷயங்கள் பொய் என்று மறுபடியும் பொய்யர்கள் அவரது பாணியில் பொய்யை பரப்புவார்களேயானால் அதற்குரிய ஆதாரத்தையும் இணைய தளத்தில் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்… ஏனெனில் மதுரை ஆதீனம் எழுதிய கடிதத்தை நாம் நம்முடைய இணைய தளத்தில் வெளியிட்டவுடன், ஆதீனம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் அமைந்த வாசகங்களை டிஎன்டி ஜேயினர்தான் ஆதீனத்தை காப்பாற்றுவதற்கு தங்களது கைப்பட எழுதியுள்ளனரோ என்ற சந்தேகத்தை பரப்பினர் பொய்யர்கள். அதை ஆதீனமே தனது கைப்பட எழுதி, வாசிக்கும் வீடியோவை நமது இணையதளத்தில் வெளியிட்டவுடன் அவதூறு பரப்பிய ஆசாமிகள் வாய் மூடிவிட்டனர். சில சந்தேகங்களும் விளக்கங்களும்
மதுரை ஆதீனத்தை மண்டியிடச் செய்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதுரை ஆதீனம் உட்கார்ந்த நிலையில் கடிதம் தருவதும், நின்ற நிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாங்கிக் கொள்வதும் புகைப்படமாக நக்கீரனில் வெளியாகியுள்ளது. மடத்தின் ஆதீனம் உட்கார்ந்திருக்க நாம் நிற்பது எந்த வகையில் நியாயம் என்று சில சகோதரர்களுக்குச் சந்தேகம் ஏற்படலாம். இது நியாயமாக எழ வேண்டிய சந்தேகம். நாம் ஒரு அதிகாரியைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்கு மட்டும் இருக்கை போடப்பட்டு நமக்கு இருக்கை போடப்படா விட்டால் நின்ற நிலையில்தான் கோரிக்கையை வைத்தாக வேண்டும். அவருக்காக நாம் மரியாதை கொடுத்தோம் என்பது இதன் அர்த்தம் இல்லை. அவருக்கு நாகரீகம் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

அதுபோல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் நீதிபதி அமர்ந்திருக்க வாதியும், பிரதி வாதியும் நிற்க வேண்டும். மனிதர்களை மதிக்காத வகையில் சட்டம் உள்ளது என்பது இதன் அர்த்தமே தவிர மண்டியிட்டோம் என்பது இதன் அர்த்தம் இல்லை. ஒரு கடையில் பொருள் வாங்கச் சென்றால் கேஷியர் உட்கார்ந்திருப்பார். நாம் நின்று கொண்டு பணம் செலுத்துவோம். இது மரியாதைக்காக செய்யப்படுவது அல்ல. அவர் உட்கார்ந்திருப்பதும், நாம் நிற்பதும்தான் வசதியானது என்பதற்காக செய்யும் ஏற்பாடாகும்.

இதுபோல் கருதிக் கொண்டு மதுரை ஆதீனம் உட்கார்ந்திருக்க நின்ற நிலையில் கடிதத்தை நம் சகோதரர்கள் வாங்கி விட்டனர். ஆனாலும் இதை நாம் நியாயப்படுத்த தயாரில்லை. அதே சமயம் அவரிடம் ஆசி வாங்கவில்லை; ஆசி வழங்கிய பாலையும் அருந்தவில்லை; அவர் ஆசியுடன் அளித்த கடிதத்தை ஏற்கவில்லை. மத மாற்றத் தடைச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரச் சொல்லும் உங்களுக்கும் பஜ்ரங்தளத்திற்கும் என்ன வித்தியாசம் என்ற அளவுக்கு மதுரை ஆதீனத்தின் பேச்சை கண்டித்துள்ளனர். அதிகாரிகள் முன்னே நிற்பதும், ஆதீனத்தின் முன்னே நிற்பதும் சமமானது அல்ல. ஆதீனம் கர்வம் காரணமாக தன் முன்னே யாரும் அமரக் கூடாது என்ற திமிரான எண்ணத்துடன் தான் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். நம் சகோதரர்கள் போலவே உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் கூட இருக்கை போடப்படவில்லை. சாமியார்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புடன் இயல்பான காரியங்களை ஒப்பிடக் கூடாது; இப்படி நடந்திருக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தச் சாமியாரைச் சந்திப்பதாக இருந்தாலும் சம நிலை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதையே காரணமாகக் கூறி புறக்கணித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராமல் நடந்தது என்றபோதும், காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் சுயமரியாதை பேணுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

கேவலப்பட்ட பொய்யர்கள் கூட்டம்  :

நாம் மன்னிப்புக் கடிதம் வாங்கும்போது நின்று கொண்டு இருக்கின்றோம் என்று பரப்பும் பொய்யர்கள் கூட்டம், நாம் மதுரை ஆதீனத்திடமிருந்து கடிதம் வாங்கி வந்த பிறகு அவரை இவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அது பற்றி மதுரை ஆதீனத்தின் உதவியாளர் நமது மதுரை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கூறியதாவது, “நீங்கள் (டிஎன்டிஜே நிர்வாகிகள்) சாமி ஆசி வழங்கிய பாலை அருந்த மறுத்து விட்டுச் சென்றீர்கள். ஆனால் உங்களது முஸ்ம் சகோதரர்களோ (பொய்யர்கள் கூட்டத்தைப் பற்றி கூறுகிறார்) சாமி ஆசி வழங்கிய பாலை மன மகிழ்வோடு மறுக்காமல் அருந்தி விட்டு சென்றனர். உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு நிலை என்று கேட்க, ஆசி வழங்கிய பாலை அருந்துவது ஏன் தவறு என்பதை ஆதீனத்தின் உதவியாளருக்கு விளக்கியுள்ளார் டிஎன்டிஜே மாவட்டச் செயலாளர் எச். ஷாகுல். மேலும் இந்த பொய்யன் கூட்டத்தினரும் ஆதீனம் அமர்ந்திருக்க இவர்களும் நின்ற நிலையில்தான் இருந்துள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க ஆதீனம் ஆசி வழங்கிய பாலை குடித்தது ஏன்? என்று நாம் பொய்யன் டி.ஜே. நிர்வாகிகளிடம் வினவ, “பாலைக் குடித்தால் என்ன தவறு?” என்று பொய்யன் டி.ஜே.வின் நிர்வாகி சர்வ சாதாரணமாக பதிலளித்துள்ளார். டிஎன்டிஜேயினர் சாமியாருக்கு என்று எந்த சக்தியும் இல்லை என்று கூறி ஆசி வழங்கிய பாலை மறுத்து விட்ட நிலையில், ஆதீனம் வழங்கிய பாலை அருந்தி விட்டு, “குடித்தால் என்ன தவறு இருக்கிறது…?” என்று கேட்கும் இந்தப் பொய்யர்களுக்கு ஆதீனத்தின் முன்பு சத்தியத்தை எத்தி வைத்த டிஎன்டிஜேயினரைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இதை மறுப்பார்களேயானால் அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிடுவோம். ஆதீனத்துக்கு முட்டுக் கட்டை கொடுத்தவர்கள் நம்மைப் போலவே நின்று கொண்டிருந்ததையும், ஆசி வழங்கி அளித்த பாலை வாங்கிக் கொடுத்ததையும் காரணம் காட்டி நமது செயலை நியாயப்படுத்த முடியாது.

அன்னியப் பெண்ணுடன் தனித்து பயணம் செய்வது தவறா என்று கேட்டவர்கள்போல நாமும் நடந்தால் அதை ஒருக்காலும் ஏற்க முடியாது. எனவே இதுபோன்ற சுயமரியாதைக்கு இழிவை ஏற்படுத்தும் செயல் இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரிவிக்கிறோம். மொத்தத்தில் நபிகளார் விஷயத்தில் தங்களது சுயநலனுக்காக ஆதீனத்தின் அடிவருடிகளாக மாறிய பொய்யர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!