ஆதார் அட்டைக்கு முஸ்லிம் பெண்கள் முக்காடை கழற்ற தேவையில்லை! அதிகாரிகளை தடுத்து நிறுத்திய TNTJ!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 04.02.2012 அன்று ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பனி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முஸ்லிம் பெண்களை படம் எடுக்கும் போது தலையில் உள்ள முக்காடை கழற்றுமாறு அதிகாரிகள் கூறினர். இதையரிந்த கிளை நிர்வாகிகள் இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தனர். ”புகைப்படம் எடுக்க முக்காடை கழற்ற வேண்டு இது கவுர்மண்ட் ஆடர்” எனக் கூறினர்.

பிறகு மாநிலத் தலைமையின் அறிவுருத்தல் மற்றும் வழிகாட்டுதலை தொடர்ந்து முக்காடை கழற்றுவது கவர்மண்ட் ஆடர் கிடையாது முகம் கண் காது மூக்கு தெரிந்தால் போதும் என்பதை கிளை நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு விளக்கினர். மேலும் சட்டத்திற்கு மாற்றமாக முஸ்லிம் பெண்களை முக்காடை கழற்றுமாறு கூறினால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனக் கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் முஸ்லிம் பெண்களிளை முக்காடை கழற்றாமல் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதனை தொடர்ந்து ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் இடங்களில் TNTJ சார்பாக “காதுவரை காட்டினால் போதும் முக்காடை எடுக்க தேவை இல்லை” மீறி யாராவது முக்காடை கழற்ற சொன்னால் TNTJ – விடம் தெரிவியுங்கள் என என்ற அறிவிப்பு பரங்கிப்பேட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டது.