அவமானம் தாங்காமல் மருத்துவ அதிகாரின் ஓரினச்சேர்கை காதலனை கொலை செய்த மகன்!

தனது தந்தையுடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்திருந்த நபரை மகன் கொலை செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ண தேவ் ராஜ் ஸ்ரீவத்சவா. இவர் அரசு துணை தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், 38 வயதான ராஜு திவிவேதி என்பவருக்கும் இடையே ஓரினச் சேர்க்கை உறவு இருந்து வந்தது.

இதனால் வேதனை அடைந்தார் ஸ்ரீவத்சவாவின் மகன் அனுபவ். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பசுபதி நகரில் பகுதியில் உள்ள ராஜு திவிவேதியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீவத்சவாவின் மகன், திவிவேதியைக் கொலை செய்தார்.

காலையில் ராஜு திவிவேதியின் அறைக்கு சென்ற அவரது தாயர் லக்சுமி தனது மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.