அல் அய்ன் மண்டல இரத்த தான முகாம் – 60 நபர்கள் இரத்த தானம்

கடந்த 20/04/2011 வெள்ளிக்கிழமை அல் அய்ன் TNTJ சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரத்த தான முகாமில் மொத்தம் 70 சகோதரர்கள் குருதி கொடையளிக்க முன்வந்தனர். இவர்களில் 60 சகோதரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல் அய்ன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்