அல் அய்னில் இரத்த தான முகாம்

கடந்த 29/04/2011 வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. அல்ஹ‌ம்துலில்லாஹ்.

இந்த முகாமில் 56 சகோதரர்கள் கலந்துக் கொண்டு தங்கள் குருதியினை கொடையளித்தனர்.

இந்த இரத்ததான முகாமிற்க்கு வருகைத் தந்து இரத்ததானம் செய்த முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவருக்கு திருமறைக் குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்அய்ன் மண்டல முன்னாள் தலைவர் சகோதரர் ஆறாம்பண்ணை முஹம்மது சலீம் அவர்கள் இதனை வழங்கினார்கள்.

இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல் அய்ன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்