அல் அய்னில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகம் அல் அய்ன் கிளை சார்பாக கடந்த 30-04-2010 வெள்ளி அன்று அல் அய்ன் கார்டன் ஹோட்டல் வளாகத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல் அய்ன் கிளை தலைவர் சகோதரர் ஆறாம்பன்னை முஹம்மது சலீம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக ஓருங்கினைப்பாளர், சகோதரர் ஹாமீன் இபுராஹீம் அவர்கள் மாற்று மத சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், இஸ்லாமிய கொள்கை புத்தகங்களும் வழங்கப்பட்டது.

சகோதரர் காயல் ரயீஸ் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.